Saturday, November 20, 2021

தேனுகா - ஏழாம் ஆண்டு நினைவுநாள்

















 "தேனுகா" அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஊடகவியலாளர், பத்திரிக்கையாளர் மற்றும் "அருஞ்சொல்" இணைய இதழின் ஆசிரியர் திரு. சமஸ் அவர்கள் காந்தியடிகள் நற்பணிக் கழகத்தில் இன்று (19.11.2021 ) உரையாற்றினார். 

"தேனுகா" அவர்கள் நமது இசை, ஓவியம் ,சிற்பம் போன்ற விஷயங்களை மேல்நாட்டு கலைகளோடு  ஒப்பிட்டு நமது பாரம்பரியத்தை போற்றினார். மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக பின்பற்றாமல் அவற்றை உள்வாங்கிக் கொண்டு நமது இந்திய , தமிழக கலாச்சார மரபுகளை சீர்தூக்கிப் பார்த்து நம் மண்ணின் கலை, பண்பாட்டு உயர்வுகளை உலகறியச் செய்வதில் இறுதிவரை முனைப்போடு செயல்பட்டு வந்தார். 

இன்றைய இளைஞர்கள் சமூகப்பொறுப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான பார்வையோடு செயல்பட வேண்டும். நமது கலாச்சாரம் ,  பண்பாடு ஆகியவற்றை எந்நிலையிலும் பேண வேண்டும். ஆழ்ந்த வாசிப்பு, கூர்ந்து நோக்கல், கவனம் செலுத்தி செயல்படுதல் ஆகியவைகளோடு பிரச்சனைகளை எதிர்நோக்கும் மனோபலம் ஆகியவற்றை வளர்த்து கொள்ள வேண்டும். தவறான கருத்துக்களை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பதன் மூலமே உண்மையை நிலைநாட்ட முடியும். தன் பொருளாதாரத்தை பெருக்கி கொள்ளும் அதே நேரத்தில் மனவளத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும்.  தனிமனித வளர்ச்சி என்பது ஓட்டு மொத்த சமூக வளர்ச்சியை மையமாக கொண்டு இருக்க வேண்டும்." என்று பேசினார்.

Sunday, May 1, 2016

கழக உறுப்பினர்கள் கூட்டம் 24-04-2016

                                 காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் உறுப்பினர்கள் கூட்டம் 24-04-2016 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பாளர் கு. பாலசுப்ரமணியன் தலைமை தாங்கி பேசினார். ஆசிரியர் க. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

                                 இலக்கிய வட்ட கூட்டங்களை திரும்ப நடத்துதல், , புத்தக திறனாய்வு கூட்டம் நடத்துதல், போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடத்துதல் , மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஏதேனும் ஒரு கிராமப்பகுதிக்கு சென்று அம்மக்களின் சமூக முன்னேற்றத்திற்கான தேவைகளை அறிதல் , அத்தேவைகளை நிறைவேற்ற முயற்சித்தல்  போன்ற பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் கழக ஆசிரியை வே. மேகலா நன்றி கூறினார்.





 

Wednesday, January 6, 2016

சிலுவைபுரம் கிராமத்திற்கு கூரைகளை பாதுகாக்க தார்பாலின்கள் 01/01/2016 அன்று வழங்கப்பட்டது



காந்தியடிகள் நற்பணிக் கழகம் சார்பில் சிலுவைபுரம் என்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு குடிசைகளின் கூரைகளை பாதுகாக்க தார்பாலின்கள் 01/01/2016 அன்று வழங்கப்பட்டது


Tuesday, October 20, 2015

Thursday, May 14, 2015

39 வது ஆண்டு விழா



காந்தியடிகள் நற்பணிக் கழகம்
39 வது ஆண்டு விழா